குடிமக்கள் சாசனம்
- குடிமக்கள் சாசனம்
- அமைப்பு பணிகள் மற்றும் பொறுப்புகள்
- எங்கள் பணித்தத்துவம்
- எங்களின் நோக்கங்கள்
- எங்கள் குறிக்கோள்
- எங்களின் வேண்டுகோள்
- கால இலக்குகள்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் பெருநகர் குடிமக்களுக்கு அளித்துவரும் சேவைகளுக்கான தனது ஒப்பிய பொறுப்பை இந்த சாசனம் மூலம் கீழ் கண்டவாறு வெளிப்படுத்துகிறது.
-
சென்னைப் பெருநகர்ப் பகுதியின் நகர திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பணியின் கீழ் முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கும் பணியில் கலந்தாலோசனை முறைமைக்கு பொது மக்களை ஊக்குவித்தல்.
-
தனது பணிகளில் ஒளிவுமறைவற்ற மற்றும் திறந்த மனப்பான்மையை அறிமுகப்படுத்துதல்.
-
விதிகள் மற்றும் முறைகள் சம்மந்தமான தகுதியுள்ள தகவல்களை அளித்தல்.
-
முழுமையான விண்ணப்பங்களின் அடிப்படையில் தனது சேவைகளுக்கு கால இலக்கினை நிர்ணயித்துக் கடைப்பிடித்தல்.
-
சென்னைப் பெருநகர்ப் பகுதி மற்றும் இதர மக்களுக்குத் தகுதி வாய்ந்த தகவல்களை இலகுவாக அடைய வழிவகை செய்தல்.
-
முடிவெடுக்கும் முறைமையை துரிதப்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரங்களை பரவலாக்குதல்.
-
மக்களுக்கு தோழமையான நிர்வாகத்திற்கான இணக்கம் அளித்தல்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அமைப்பு பணிகள் மற்றும் பொறுப்புகள்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 1971-ம் வருடத்திய தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நகர்ப்புற திட்ட குழுமமாகும்.
இக்குழுமம் தற்சமயம் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரின் தலைமையிலுள்ளது.
பொது மக்களுடனான கலந்தாலோசனை முறைமையுடன் சென்னைப் பெருநகர் பகுதிக்கு, பகுதி வளர்ச்சித் திட்டங்களான முழுமைத் திட்டம்/விரிவான வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்கிறது.
இக்குழுமம் அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் பெருநகர்ப் பகுதியின் வளர்ச்சிக்கு திட்டக் கருவை தெரிவு செய்தல், திட்ட வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்கிறது.
விதிகளின்படி வளர்ச்சி நடவடிக்கைகளை இக்குழுமம் ஒழுங்கு செய்கிறது.
அரசு நிறுவனங்கள், சமுதாய நல அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலமாகச் செயல்படுத்தும் திட்டங்களை ஒருங்கிணைத்தல் மேற்பார்வையிடுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளது.
எங்கள் பணித்தத்துவம்
திட்டமிடல் முறைமை மற்றும் நகர வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மூலம் சென்னைப் பெருநகர் பகுதியின் சுற்றுச் சூழல் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்.
எங்களின் நோக்கங்கள்
-
தொலைநோக்குத் திட்டமிடல்.
-
விரும்பத்தக்க நகர வளர்ச்சிப் படிவத்தை அடைய உரிய திட்டங்களையும் மற்றும் செயல் திட்டப்பணிகளையும் நடைமுறைப்படுத்துதல்.
-
தேர்வு செய்யப்பட்ட செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்தல்.
-
நகர வளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மூலம் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு உயர்த்தல்.
-
நடப்பு வாழ்க்கை நிலையை உயர்த்த புதுமையான திட்டங்களை வடிவமைத்தல்.
-
எங்களின் செயல்பாடுகளில் திறந்த ஒளிவு மறைவற்ற தன்மை.
-
மக்கள் பணியில் கவனமும் கனிவும்.
எங்கள் குறிக்கோள்
-
சென்னைப் பெருநகர் குடிமக்களுக்கு பயன்தரும் வகையில் குழும ஆலோசனை மற்றும் கலந்தரையாடல் சேவையை சீரிய முறையில் வழங்குதல் மற்றும் அப்பணியைப் பேணுதல்.
-
திட்ட வடிவு மற்றும் செயல் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சங்கங்கள் எழுப்புகின்ற தகுதி வாய்ந்த சந்தேகங்கள் மற்றும் வினாக்களுக்கு பதில் அளித்தல்.
-
முழுமையாகப் பெறப்பட்ட தீர்மானங்களை வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் அங்கீகரித்தல் (கால இலக்கு அட்டவணையை காண்க).
-
விண்ணப்பங்களின் பரிசீலனைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விபரங்கள் மற்றும் விடுபட்ட தகவல்களை ஒரே சமயத்தில் கேட்டு பெறுதல்.
-
விதிகளுக்கு உட்பட்டிருக்கும் வண்ணம் நகர வளர்ச்சியினைக் கண்காணிக்க, அமலாக்க செயல் முறையை அளித்தல்.
-
வணிக நோக்கத்துடன் அங்கீகாரமற்ற மற்றும் விதிகளுக்கு புறம்பாக கட்டப்படும் கட்டிடங்களினால் ஏற்படும் ஆபத்துக்களையும் இடர்பாடுகளையும் எடுத்துச் சொல்லி பொது மக்களை எச்சரித்தல்.
-
திட்ட அனுமதி வழங்குதல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் விதிகள் பற்றிய விளக்கம் சம்பந்தப்பட்ட அலுவலகச் சுற்றறிக்கைகள் மற்றும் குறிப்பாணைகளைத் தொகுத்து வெளியிடுதல் மூலம் இப்பணியில் ஒளிவுமறைவற்ற தன்மையை கொண்டு வருதல்.
-
அனைத்து கோரிக்கை மற்றும் புகார் மனுக்களையும் ஏற்று அவற்றிக்கு பதிலளித்தல்.
-
பொதுமக்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான வேலைகள் இக்குழுமத்தில் மேற்கொள்ளும் போது இடையூறுகள் ஏற்பட்டிருப்பின் அவைகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்ற வகையில் அவர்களை ஊக்குவித்தல், அதற்கு குழுமத்தின் நடைமுறையில் தக்க மாற்றம் செய்தல்.
எங்களின் வேண்டுகோள்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தனது விண்ணப்பதாரர்களிடம் வேண்டுவது என்னவெனில்
-
திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பொழுது படிவம் 'அ' அல்லது 'ஆ'-மற்றும் சரிபார்க்கும் பட்டியலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அளித்தல்.
-
தனித்தனியாக விவரங்களை கேட்பதைத் தவிர்க்கக் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் விடுபடாத வகையில் உரிய காலத்திற்குள் சமர்ப்பித்தல்.
-
வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி வளர்ச்சியினை மேற்கொள்ள பணிக்கும் பிணையத் தொகையை கேட்கப்படும் காலத்திற்குள் செலுத்தப்படுதல்.
-
திட்ட அனுமதியில் விவரித்துள்ள அனைத்து விபரங்களையும் விளம்பர விளக்கப் பலகையில் தெரிவித்து சம்மந்தப்பட்ட இடத்தில் நிறுவுதல்.
-
அங்கீகாரமற்ற கட்டிடங்கள் பற்றிய தகவல்களைத் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இக்குழுமத்திற்கும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கும் தெரிவித்தல்.
-
மேலும் விண்ணப்பத்தாரர்கள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின்படி மேற்கொள்ள வேண்டும் என இக்குழுமம் எதிர்பார்க்கின்றது.
-
ஆக்கப்பூர்வமான ஆலோசனைக் கலந்தாய்வு முறைமையில் பொது மக்கள் பங்கு கொள்ள வேண்டுமென இக்குழுமம் எதிர்பார்க்கின்றது.
எங்கள் சேவைகளின் கால இலக்குகள்
இக்குழுமத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது குறிப்பிட்ட கால இலக்கிற்குள் முடிவு எடுத்திட முனைப்புடன் இக்குழுமம் செயல்படுகின்றது.
சிறப்புவகைக் கட்டிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் முகப்பில். விண்ணப்பங்கள் பெறப்படும் நாளிலிருந்து அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பரிசீலனைக் கட்டணம் கட்டப்பட்ட நாளிலிருந்து கீழ்கண்ட கால இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
1 |
குறைகளை நிவர்த்தி செய்து மறுபடியும் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள் தெரிவிக்க |
21 பணி நாட்கள் |
2 |
முழுமையாக பெறப்பட்ட கீழ்காணும் வளர்ச்சிக்களுக்கான விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் பற்றிய முடிவான பதில் தர : |
|
சாதாரணவகைக் கட்டிடங்கள் |
45 பணி நாட்கள் | |
சிறப்பு வகைக் கட்டிடங்கள் |
45 பணி நாட்கள் | |
தொழிற்கூடம் மற்றும் நிறுவனக் கட்டிடங்கள் |
45 பணி நாட்கள் | |
மனை உட்பிரிவு |
45 பணி நாட்கள் | |
பலமாடி கட்டிடங்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அரசிற்கு பரிந்துரை அளிக்க |
75 பணி நாட்கள் | |
கோரிக்கை மற்றும் புகார் மனுக்களுக்கு பதில் கொடுக்க |
30 பணி நாட்கள் | |
வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் நில உபயோக மாற்றங்கள் பற்றிய விளக்கங்கள் அளிக்க |
10 பணி நாட்கள் | |
ஒதுக்கீட்டாளர்களுக்கு நிலுவையில்லை என சான்றிதழ் மற்றும் தடையின்மை சான்றிதழ் வழங்க |
30 பணி நாட்கள் | |
தகுதியான ஒதுக்கீட்டாளர்களுக்கு மனைகள் மற்றும் வீடுகள் ஒப்படைப்பு செய்ய |
30 பணி நாட்கள் | |
தகுதியான ஒதுக்கீட்டாளர்களக்கு விற்பனை பத்திரம் பதிவு செய்து கொடுக்க |
20 பணி நாட்கள் |