கோயம்பேட்டில் சென்னை ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையம்

தனியார் பேருந்துகளை ஒழுங்கு முறைப் படுத்தி இயக்க வேண்டி கோயம்பேடு மொத்த வளாகத்தில் 6.75 ஏக்கர் பரப்பளவில் சென்னை ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையம் 25.8.2003-ல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையமானது சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. சென்னை ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையத்தில் 80 பேருந்து தடங்களும், 150 பேருந்துகள் ஒய்வு நேரத்தில் நிறுத்த இடமும் உள்ளது. மேலும் 51 தனியார் பேருந்து இயக்கக அலுவலகங்களும், 22 கடைகளும், 14 பயணிகள் காத்திருக்கும் அறைகளும், (அதாவது 120 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகளுடன்) உள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் இதை பராமரித்து வருகிறது. இந்த நிலையத்திலிருந்து சுமார் நாளொன்றுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.