பரப்புத்திட்டப் பிரிவு
சென்னை மாநகராட்சி, 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 214 கிராமங்களைக் கொண்ட 10 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 1186 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னைப் பெருநகர்ப் பகுதியை தனது அதிகார எல்கைக்குட்பட்ட பகுதியாக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கொண்டுள்ளது. வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் சொல்லியபடி சென்னைப் பெருநகர்ப் பகுதியில் வளர்ச்சியினை முறைப்படுத்துதல், பரப்புத் திட்டப் பிரிவின் முக்கிய செயல்பாடாகும். அதன்படி பரப்புத் திட்டப் பிரிவு கீழ் காணும் முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்கிறது.
- திட்ட அனுமதி வழங்குதல்.
- மனைப் பிரிவு மற்றும் சிறிய நிலப்பகுதிக்கான மனை உட்பிரிவுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.
- நில உபயோகப் பயன்பாடு மாறுதலுக்கு ஒப்புதல் அளித்தல்.
- விதிகள் பற்றிய சந்தேகங்கள் தொடர்பாக கலந்துரையாடுதல் மற்றும் ஆலோசனைகளைப் பொதுமக்களுக்கு வழங்குதல்.
- உள்ளாட்சி நிறுவனங்களால் வழங்கப்படும் திட்ட அனுமதிகள் மற்றும் அனுமதியில்லாத கட்டிடங்கள் மீது எடுக்கப்படும் செயல் நடவடிக்கைகளை, மறு ஆய்வு மூலம் மதிப்பீடு செய்தல்.
- செ.பெ.வ.குழுமம் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் திட்ட அனுமதி மறுப்பு ஆணைக்கு எதிராக அரசாங்கத்திடம் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்து குழுமத்தின் கருத்துருவினைச் சமர்ப்பித்தல் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள திட்ட அனுமதிகளை மறு ஆய்வு செய்தல்.
- வரம்பு மீறும் மேம்பாட்டின் மீது வளர்ச்சிக்கட்டுப்பாடு விதிகளை அமுல்படுத்துதல்/ அனுமதியில்லாத மற்றும் விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
கீழ் காணும் செயற்பிரிவுகள் பரப்புத்திட்டப் பிரிவில் உள்ளன:
- "பி" - பிரிவு - இதில் சிறப்பு வகைக்கட்டிடம் மற்றும் தொகுப்புக் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றது. சென்னைப் பெருநகரப் பகுதியை வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதி எனப் பிரிக்கப்பட்டு, திட்ட அனுமதி விண்ணப்பங்கள் நான்கு பிரிவுகளில் பரிசீலனை செய்யப்படுகின்றன.
- "சி" - பிரிவு – இதில் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்களுக்கான கட்டுமான மேம்பாடுகளுக்கு திட்ட அனுமதி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
- மனைப்பிரிவுக்கான விண்ணப்பங்கள் மனனைப்பிரிவுப் பிரிவில் பரிசீலனை செய்யப்படுகின்றன.
- பல அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான பலமாடிக் கட்டிடம் தொடர்பான பரிசீலனைப் பிரிவு.
- நில உபயோக மாற்றம் விழையும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பிரிவு
- கலந்துரையாடும் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் மையம்.
- முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நில உபயோக மண்டலத்தில் உபயோக மாற்றம் கோரும் விண்ணப்பங்கள், நில உபயோக மாற்றப்பிரிவில் பரிசீலனை செய்யப்படுகின்றன.
- உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி அவை திட்ட அனுமதிகளை வழங்குகின்றனவா என்று ஆய்வு செய்து உரிய அறிவுரை கூறுதல், மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்ட அனுமதி மறுப்பு ஆணைகளுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களுக்கு கருத்துருவினை அரசுக்கு வழங்கும் பிரிவு.