சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினைப் பற்றி
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 1972-ல் உருவாக்கப்பட்டு 1971-ம் வருடத்திய தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டப் பூர்வ அமைப்பாக மாறியது. சட்டப்பிரிவு 9-அ (2) ன் உட்பிரிவு 1-ன் கீழ் தோற்றுவிக்கப்பட்டு குழுமம் கீழ்காணும் உறுப்பினர்களை கொண்டுள்ளது.
உறுப்பினர்கள்
1. | மாண்புமிகு வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதித்துறை அமைச்சர் | தலைவர் |
2. | துணைத் தலைவர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் | துணைத் தலைவர் |
3. | உறுப்பினர்-செயலர், செ.பெ.வ.கு. | உறுப்பினர் |
4. | செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை | உறுப்பினர் |
5. | செயலர், நிதித் துறை | உறுப்பினர் |
6. | செயலர், தொழிற்துறை | உறுப்பினர் |
7. | செயலர், போக்குவரத்துத் துறை | உறுப்பினர் |
8. | ஆணையர், சென்னை மாநகராட்சி | உறுப்பினர் |
9. | மேலாண்மை இயக்குநர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் | உறுப்பினர் |
10. | இயக்குநர், நகர மற்றும் ஊரமைப்புத் திட்ட இயக்ககம் | உறுப்பினர் |
11. | தலைமை திட்ட அமைப்பாளர், செ.பெ.வ.கு. | உறுப்பினர் |
12. | தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலை மற்றும் ஊரகப் பணித் துறை | உறுப்பினர் |
13. | தலைமைக் கட்டிடக்கலை வல்லுநர், தமிழ்நாடு அரசு | உறுப்பினர் |
14. | இணை இயக்குநர், நகர மற்றும் ஊரமைப்புத் திட்ட இயக்ககம் | உறுப்பினர் |
15. | தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் | உறுப்பினர் |
16. | தலைவர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் | உறுப்பினர் |
17. | சட்டப்பேரவை உறுப்பினர்கள் | உறுப்பினர், 2 நபர்கள் |
18. | சென்னைப் பெருநகர பகுதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் | உறுப்பினர் 4 நபர்கள் |
19. | உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் | சிறப்பு அழைப்பாளர் |
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் செயல்பாடுகள்
அ) சென்னைப் பெருநகர்த் திட்டப் பகுதியில் நில உபயோகம் மற்றும் பயன்கள் பற்றிய அளவீடு செய்து அதனடிப்படையிலான அறிக்கைகளை தயாரித்தல்.
ஆ) சென்னைப் பெருநகர்த் திட்டப் பகுதிக்கான முழுமை திட்டம் / விரிவான வளர்ச்சித் திட்டம் / புதுநகர் போன்றவைகளுக்கான வளர்ச்சித் திட்டம் தயாரித்தல்.
இ) நடப்பு நிலவர நில உபயோக வரைபடம் தயாரித்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவைப்படும் வரைபடங்களை தயாரித்தல்.
ஈ) வளர்ச்சி திட்டத்தில் கூறப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுதல் மற்றும் நிறைவேற்ற தூண்டுதலாக இருத்தல்.
உ) சென்னைப் பெருநகர் திட்டப் பகுதியினை முழுமையாக நிர்ணயிக்கவோ அல்லது இதன் அதிகாரத்திற்குட்பட்ட ஏதாவதொரு பகுதியிலோ, புதுநகரை நிர்மானம் செய்து அதற்கான கீழ்காணும் பணிகளையும் மேற்கொள்ளுதல்.
சம்பந்தப்பட்ட பகுதியின் புதுநகருக்கான மேம்பாட்டு திட்டம் தயாரித்தல் மற்றும்
புதுநகருக்கான மேம்பாட்டு திட்டத்தின்படி மனைப்பிரிவை அமைத்து வளர்ச்சி மேற்கொள்ளுதலை உறுதி செய்தல்.
ஊ) அரசினால் ஒப்படைக்கப்படும் இதர மற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்
குழுமத்தால் தயாரிக்கப்பட்ட எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்த தனது ஆணையின் மூலமாக, தன்னால் தெரிவு செய்யப்பட்ட அதிகார அமைப்புகளிடத்திலோ அல்லது வேறு அமைப்புகளிடத்திலோ ஒப்படைப்பு செய்தல்.
சென்னைப் பெருநகர்ப் பகுதிக்குள் அடங்கும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளையோ அல்லது வேறு எந்தவொரு அதிகார அமைப்பினையோ குழுமம் தனது அதிகாரத்தின் கீழ் அல்லது தன்னால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அல்லது நகர்புற திட்டமிடல் சட்டத்தின் கீழ் செயல்பட நியமிக்கும். அவ்வாறான அதிகாரங்களை தனது ஆணையின் மூலம் தெரிவிக்கப்படும் சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளின்படி, திரும்பப் பெற்றுக் கொள்ளும்.
சென்னைப் பெருநகர்ப் பகுதிக்குள் அடங்கும் சென்னை மாநகராட்சி, நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், மற்றும் 10 ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கும் கிராமங்களின் பட்டியலை காண்க.
எங்களின் தொலைநோக்குப் பார்வை
நீடித்த நிலையான சுற்றுச் சூழலை உருவாக்குவது, பொருளாதாரத்தில் மேம்பாட்டினை கொண்டதும், தொழிநுட்பத் திறனில் புதுமையினைக் கொண்டதுமான நிர்வாக கொள்கைகள் மற்றும் செயற் திட்டங்கள் மூலம், சென்னைப் பெருநகர் பகுதியின் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்துதலை உறுதி செய்யும், மக்கள் நல நிர்வாகத்தினை கொடுப்பதுவே இக்குழுமத்தின் தொலைநோக்குப் பார்வையாகும்.
எங்கள் பணித்தத்துவம்
