துரித இருப்புப் பாதை போக்குவரத்து திட்டம் (MRTS) இரண்டாம் கட்டத்திலுள்ள உள்ள இருப்புப் பாதை நிலையங்களின் வான் பரப்பு பகுதியில் வணிக வளாகம் அமைக்கும் திட்டம்

துரித இருப்புப் பாதைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டுர்புரம், கஸ்துhரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய 9 இருப்புப்பாதை நிலையங்களை அமைப்பது மற்றும் 11.166 கி.மீ நீளத்திற்கு இருப்புப்பாதை அமைக்கும் பணி ஆகியவற்றை சுமார் ரூ.733 கோடி செலவில் முடிக்க கணக்கிடப்பட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் போல் அல்லாமல் இரண்டாம் கட்டத்தில் மேற்கண்ட நிலையங்களின் வான்பரப்பில் (அ) நிலையத்தின் பக்கத்தில் உள்ள நிலப்பரப்பில் வணிக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள செ.பெ.வ.கு. உரிமை பெற்றுள்ளது.
இருப்புப் பாதை நிலைய கட்டமைப்பு / பொறியியல் வடிவமைப்புகளை ரயில்வேதுறைக்கு தகுந்தாற்போலும், வணிக வளாகங்களின் வடிவமைப்புகளை செ.பெ.வ.குழுமத்திற்கு தகுந்தாற்போலும் நிறைவேற்றும் பணிகள் பிரபல கலந்தறி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இருபுப் பாதை நிலைய கட்டுமானம் மற்றும் இருப்பு பாதை அமைக்கும் பணிகளைஇருப்பு பாதை போக்குவரத்து துறையும் ரயுல்வே நிலையங்களின் வான்பரப்பு (அ) அருகில் உள்ள இடத்திலும் கட்டப்படவுள்ள வணிக வளாக வளர்ச்சிப் பணிகளை செ.பெ.வ.கு. மேற்கொண்டு வருகின்றது. இருப்பு பாதைபோக்குவரத்து துறை தனது பணிகளை முடித்தவுடன், செ.பெ.வ.குழுமம் அரசு ஒப்புதலுடன் நிலையத்தின் வான் பகுதியில் வர்த்தக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்.
வணிக வளாக விவரங்கள் இருப்புப் பாதை நிலைய வாரியாக கீழே வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
எண் | நிலையங்கள் | தளங்களின் எண்ணிக்கை | பரப்பளவு (ச.மீ) |
---|---|---|---|
1 | மந்தவெளி | 4 | 177540 |
2 | கீரின்வேஸ் சாலை | 4 | 263620 |
3 | கோட்டுர் புரம் | 8 | 107600 |
4 | கஸ்தூரிபா நகர் | 4 | 161400 |
5 | இந்திரா நகர் | 4 | 344320 |
6 | திருவான்மியூர் | 4 | 344320 |
7 | தரமணி-I | 4 | 193680 |
8 | தரமணி-II (பெருங்குடி) | 8 | 193680 |
9 | வேளச்சேரி | 4 | 258240 |
மொத்தம் | 2044400 |
மொத்தமுள்ள 9 நிலையங்களில் மந்தைவெளி முதல் திருவான்மியூர் வரையுள்ள ஆறு நிலையங்கள் பங்கிங்காம் கால்வாய் ஓரத்திலும், தரமணி முதல் வேளச்சேரி வரையுள்ள ஏனைய மூன்று நிலையங்கள் பங்கிங்காம் கால்வாயிலிருந்து தள்ளியும் அமைந்துள்ளது.
"தாமே கட்டி பராமரித்து பிறகு ஒப்படைத்தல்" (BOT) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வணிக வளாக வளர்ச்சி பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தும் தமிழக அரசின் குழுவிற்கு உதவிட மேற்சொன்ன கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களைக் கண்டறிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நடைவடிக்கை எடுத்து வருகிறது.