பரப்பு வளர்ச்சிப் பிரிவு

ஜார்ஜ் டவுன் பகுதியில் செரிந்துள்ள மொத்த விற்பனை வியாபாரங்களை அவ்விடத்திலிருந்து மாற்றி, சென்னையின் மையப்பகுதியினை நெரிசல் அற்ற பகுதியாக மாற்ற விழையும் முழுமைத் திட்டத்தின் கொள்கையினை செயலாற்ற, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் தனியாக பரப்பு வளர்ச்சிப் பிரிவு செயல்பட்டு வருகின்றது. திட்டமிடல் பிரிவு, கட்டுமானப் பிரிவு, ஒதுக்கீட்டுப் பிரிவுகளுடன் நிர்வாக மற்றும் நிதி மேலாண்மை பிரிவுகள் இப்பரப்பு வளர்ச்சிப் பிரிவில் உள்ளன.

நெரிசலை குறைக்கும் திட்டங்களை செயல்படுத்த பொறுத்தமான இடங்களை தெரிவு செய்து, செயல்படுத்தவுள்ள திட்டங்களுக்கான வரைவுகளை திட்டமிடல் பிரிவு உருவாக்குகின்றது. (உதாரணமாக, அழுகும் பொருட்களுக்கான சந்தைகள், இரும்பு மற்றும் எஃகு சந்தை, சரக்குந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளுக்கான நிலையங்கள்)

மேற்சொன்ன திட்டங்களின் பொறியியல் பணிகளுக்காக கட்டுமானப் பிரிவு பரப்பு வளர்ச்சிப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட மக்கட் தொகையினரை இனங்கண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை ஒதுக்கீட்டுப் பிரிவு மேற் கொள்கின்றது.