சொத்துக்கள் வாங்குதல்
அடுக்கக குடியிருப்பு வாங்கும் முன் கவனிக்க வேண்டிய குறிப்புகள்
கடினமாக சேர்த்துள்ள சேமிப்பு பணத்தினை காப்பாற்றுங்கள்
-
அங்கீகாரம் பெற்ற வரைபடம் பற்றிய விவரங்கள் கட்டுமான இடத்தில் பார்வைக்கு வைக்கப்படுள்ளதா என்று சோதித்துப் பாருங்கள்.
-
அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின்படி அடுக்ககம் கட்டப்பட்டுள்ளதா என்று சோதித்துப் பாருங்கள்.
-
மனையின் உரிமையாளர்/உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவருக்கு பிரிக்கப்படாத மனைப் பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்ய உரிமை உள்ளதா என்பதை சோதித்துப் பாருங்கள்.
-
மனையின் உரிமையாளர்/உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவர் பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதியையும் அடுக்ககக் குடியிருப்பு வாங்குவோர்களுக்கு மாற்றம் செய்துள்ளாரா என்பதைச் சோதித்து அறிந்து கொள்ளுங்கள்.
-
கட்டுமானம் முடிந்த பின்னர் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால், கட்டிடப் பணி வரைப்படத்தின்படி கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான பணி முடிவுச்சான்றிழை மேம்பாட்டாளர் பெற்றுள்ளரா என்பதை சோதித்துப்பாருங்கள்.
-
அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குதலில் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் எங்களது ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தினை தொடர்பு கொள்ளவும்.