காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையம்

Bio Methanation Plant

நாட்டிலேயே முதன்முறையாக கோயம்பேடு மொத்த அங்காடி வளாகத்திலுள்ள அழுகும் பொருள் வளாகத்திலிருந்து உருவாகும் கழிவுப் பொருட்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உருவாக்கியது. இந்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறையும் சென்னை பெருநகர் வளாச்சிக் குழுமமும் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்தியது. சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான தொழில் நுட்பங்களையும் கண்காணிப்பையும் வழங்கியது. என்கெம் என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் ஆஸ்திரியாவிலுள்ள என்டெக் ஜி.எம்.பி.bஉறச் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த நியமிக்கப்படடனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இத்திட்டத்திற்கு 1.16 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தினை ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூ.5.0 கோடியாகும். அதில் மரபு சாரா எரிசக்தி துறை ரூ.3.75 கோடியையும், அங்காடி நிர்வாகக் குழு ரூ.1.75 கோடியை ஏற்றுக் கொண்டுள்ளது.இந்த நிலையமானது ஒரு நாளைக்கு 30 டன் அழுகும் பொருட்களின் கழிவிலிருந்து நாளொன்றுக்கு 2000 யூனிட் அளவிற்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சுய உபயோகம் போக எஞ்சியுள்ள மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையமானது 04 .9. 2005 தேதியி லிருந்து இயங்கி வருகிறது.