சென்னைப் புறநகர் பேருந்து நிலையம்

சென்னைப் புறநகர் பேருந்து நிலையமானது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மற்றொரு ஒப்பற்ற திட்டமாகும். இது சென்னை மாநகரின் எல்லையிலுள்ள ஜவஹர்லால் நேரு சாலையை ஒட்டி (உள் வட்டச் சாலை) ஆரம்பிக்கப்பட்டது, ஆசியாவின் ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையமான இது ரூ.103.00 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு 18.11.2002 முதல் இயங்கி வருகின்றது, இந்நிலையம் பிரபலமான கட்டிட கலைஞரால் வசீகரிக்கக்கூடிய வகையிலும் நல்ல கட்டிடங்களையும் தகுந்த இடவசதியுடன் எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது, இந்நிலையம் 36 ஏக்கர் நிலப்ரப்பில் 17840 ச,அடி கட்டுமானப் பரப்பைக் கொண்டது, இதில் பிரதான மையக்கூடம், பேருந்து நிறுத்த நடைமேடை, பெரிய அலுவலக பரப்பு, கடைகள், பராமரிப்பு நிலையம், ஓய்வறைகள் மற்றும் தேவையான கட்டுமானங்கள் உள்ளது, மூன்று பேருந்து நிறுத்த நடைமேடையில் ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் வரை நிறுத்தவும் மற்றும் 60 பழுதான பேருந்துகளை நிறுத்த போதுமான நடைமேடையும் உள்ளது, ஒரு நாளைக்கு 2000 வெளியூர் பேருந்துகள் வரை சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன, மேலும், தனியாக கார்கள் / ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது, இந்நிலையம் நன்முறையில் பராமரிக்கப்படுவதால் ஐ.எஸ்.ஓ. 9001:2000 தரச் சான்றிதழ் பெற்று உள்ளது. இப்பேருந்து நிலையத்திற்கும் உள்வட்ட சாலைக்கும் இடையேயுள்ள காலி இடத்தில் 3000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இரட்டை அடுக்கு வாகன நிறுத்தும் கீழ்தளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.