தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான சலுகைகள்

தமிழக அரசு தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை கொள்கையினை வகுத்துள்ளது. அதன்படி வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளின் கீழ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளின் வளர்ச்சிகளுக்கு கீழ்க்கண்ட சலுகைகள் உள்ளன.

  1. தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான, கட்டிடங்கள் சென்னைப் பெருநகர்ப் பகுதி முழுவதிலும் அனுமதிக்கப்படும்,

  2. விவசாய உபயோகப்பகுதி, நகர்சாராத உபயோகப்பகுதி, சிறப்பு மற்றும் அபாயகரமான தொழிற்சாலைப்பகுதி மற்றும் திறந்தவெளி உபயோகப்பகுதி ஆகியவற்றைத் தவிர்த்து ஏனைய நில உபயோகப்பகுதிகள் அனைத்திலும் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.

  3. வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளில் வழக்கமாக அனுமதிக்கத்தக்க தரைப்பரப்புக் குறியீட்டைக் காட்டிலும் 1.5 மடங்கு தளப்பரப்புக் குறியீடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளின் வளர்ச்சிகளுக்கு அளிக்கப்படும்.

  4. வழக்கமாக அனுமதிக்கப்படும் வாகனங்கள் நிறுத்தும் தேவையைக் காட்டிலும் 50ரூ கூடுதலான இடத்திற்கும், முதல் தளத்தில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கும் தளப்பரப்பு குறியீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

  5. ஒதுக்கீடு செய்து தானமாக வழங்கப்பட்ட திறந்த வெளி ஒதுக்கீட்டுப்பகுதியைத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பராமரிப்பிற்கு வழங்கப்படும்.

  6. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் “விரைவுப்பாதை முறை” யில் பரிசீலிக்கப்படும்.