கட்டுமானப் பிரிவு
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைதுறை, வீட்டு வசதி வாரியம், குடிசைமாற்று வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம் போன்ற அரசு நிறுவனங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த கட்டுமானப் பொறியியல் செயற்திட்டங்க்ளை மேற் கொள்கின்றன.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற அமைப்பினை ஏற்படுத்திய பின்னர், சென்னையின் மையப் பகுதியை நெருக்கடியற்ற நகரமாக மாற்றும் முக்கிய கொள்கையின்படி திட்டங்கள் இக்குழுமத்தால் மேற் கொள்ளப்படுகின்றன. இதன்படி, புது நகர்களை உருவாக்குதல் சென்னையின் மையத்திலுள்ள வர்த்தகச் செரிவை வேறு இடத்திற்கு மாற்றுதல், சென்னையின் நுழைவிடத்திலுள்ள முக்கியமான போக்குவரத்து தடங்களில் சரக்குந்து நிலையங்களை அமைத்தல், புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் உருவாகின. மேற் சொன்ன அரசு நிறுவனங்கள் இதுபோன்ற நகர் வளர்ச்சித் திட்டங்களை ஏற்று செயலாற்றாததினால் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தன்னுடைய பொறியியல் கட்டுமானத்துறையை 1984-ல் உருவாக்கி இத்திட்டங்களை எடுத்து செயலாற்றியது.
இப்பிரிவின் மூலம் செயலாக்கம் பெற்ற திட்டங்கள்:
-
கோயம்பேட்டில் அழுகும் பொருள்களுக்கான அங்காடி வளாகம்
-
சென்னைப் பெருநகர் வளர்ச்சித் திட்டத்தின் முதல் அலுவலக கோபுர வளாகம்
-
சென்னைப் பெருநகர் வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாம் அலுவலக கோபுர வளாகம்
-
மறைமலைநகரில் சில அபிவிருத்திப் பணிகள்