அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
விண்ணப்பபடிவத்துடன் கீழ்காணும் தகவல்களை காட்டும் 5 வரைபடங்கள்
-
வரைபடங்கள்
-
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள மனையின் அளவுகள் அதில்அமையவுள்ள கட்டிடத்தின் அமைப்பு பற்றிய தெளிவான விபரங்கள் குறிப்பாக தெரிவிக்கும் இடைவெளி அளவுகள் கொண்ட வரை படம்.
-
உத்தேசித்துள்ள கட்டிடத்தின் தரைப்படம், பக்கவாட்டுத் தோற்றம், வெட்டுத் தோற்றத்தின் விவரங்கள், நடப்பு கட்டுமான(ஏதேனும் இருப்பின்) விவரங்கள், புதிய உபயோகம் அல்லது வேறு உபயோக மாற்றத்திற்கான கோரிக்கை இருப்பின் அது தொடர்பான முழு விவரங்கள்.
-
மனையின் அமைவிடத்தை காட்டும் வழிகாட்டும் வரைபடம், இவ்வரைபடங்கள் மற்றும் விண்ணப்பத்தில் மனுதாரர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினால் அனுமதி பெற்ற கட்டிட வரையாளர், நில அளவையாளரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
-
-
சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளிடமிருந்து தீர்மானத்திற்கான ஒப்புதல் கடிதம்.
-
மனையின் உரிமையை நிலைநாட்ட உதவும் கிரயப்பத்திரஆவணம் / குத்தகைப்பத்திர ஆவணம், மற்றும் பட்டா முதலிய ஆவணங்கள்.
குழுமம் அளித்துவரும் சேவைகள் தொடர்பாக ஏதேனும்சந்தேகங்களுக்கான விளக்கம் பெறுவதில் சிக்கல் இருப்பின் பொது தகவல் அலுவலரை உதவிக்கு சந்திக்கவும்.
முழுமைத்திட்டத்தில் தங்களது மனை அமைந்துள்ள நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நில உபயோகம் மற்றும் உத்தேசித்துள்ள உபயோகத்திற்கான வளர்ச்சிக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்ற அடிப்படையில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.
வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை காண இங்கு சொடுக்கவும்
உங்களின் விண்ணப்பம் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்புடையதாக இருப்பின் திட்ட அனுமதி வழங்கப்படும்,இல்லாவிடில் உள்ளாட்சி நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். சில பெரிய வளர்ச்சிக்கான விண்ணப்பங்கள் மட்டும் உள்ளாட்சி அமைப்பின் மூலம் குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
திட்ட அனுமதி பெறாமல் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டாலும், அவை அங்கீகாரம் பெறாத வளர்ச்சிகளாக கருதப்பட்டு, சட்ட விதிகளின்படி அனுமதி பெறாத அக்காட்டுமானங்களை இடிக்கவும் முடியும்.
அங்கீகாரம் பெற்ற வரைபடத்தை மீறிக் கட்டுமானம் இருப்பின் இம்மாறுபாடுகளைத் தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.இங்கு அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தை விட்டு விலகிச் சென்று கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தை, தெளிவாக காட்டும் திருத்திய வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். சாதாரணமாகத் திட்ட அனுமதி பெற விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பொழுது கையாளப்படும் பரிசீலனை நடைமுறைகளே இதற்கும் கையாளப்படும்.