கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம்

சென்னை ஜார்ஜ் டவுன் (நகரின் மையப்பகுதி) பகுதியில் எதிர்விளைவுகளால் சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ள நிலை அவ்விடத்தில் நேரடியாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளையும், அங்கு வரும் பெருவாரியான பொதுமக்களையும் பாதிக்கிறது. மேலும், இவ்விடத்தில் வியாபாரிகளையும், தொழிலாளர்களையும், வாகனங்கள் இயக்குபவர்களையும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதில் ஈடுபவர்களையும் மற்றும் பாதுகாவலர்களையும் பாதிக்கிறது. சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள நெரிசலை குறைக்கும் பொருட்டும் யாருக்கும் இடையூறு இல்லாமல் ஏற்கனவே உள்ள தொழில்களை அங்கீகரித்தும் மற்றும் நகரத்திற்கு வரும் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தியும், இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் பாதிக்காதவாறு பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் பொருட்டு நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய ஒரு முடிவினை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்கொண்டது. அதன்படி புதிய மொத்த அங்காடி வளாகத்தினையும், புதிய நகர பேருந்து நிலையத்தினையும் மற்றும் சரக்கு ஊர்தி முனையங்களையும் நெருக்கடியில்லாத பகுதிகளில் நகரத்திற்கு அருகிலேயே இடத்தினை தேர்வு செய்து, திட்டமிட்டு செயல்படுத்த முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் கோயம்போடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் உருவாக்கப்பட்டு, நகரத்திலுள்ள நெரிசலை குறைத்துள்ளது. கோயம்பேடு மொத்த அங்காடி வளாகம் 295 ஏக்கர் பரப்பளவில் அமைத்திட திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சாலையையும் மற்றும் நெசப்பாக்கம் சாலையை ஒட்டியும் மற்றும் நகரத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் எளிதாக வந்து செல்ல ஏதுவாகவும் கோயம்பேடு தெரிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக அழுகும் பொருட்களுக்காக 3194 கடைகள் கட்டப்பட்டு அதில் 2948 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதுநிலை நிலஉடைமை அலுவலர், (கோயம்பேடு) அவர்கள் மீதமுள்ள கடைகளை ஒதுக்கீடு செய்ய நாளிதழ்களில் அவ்வப்போது ஒதுக்கீடு செய்ய விளம்பரம் வெளியிடுகிறார்.