சென்னையில் திரளான துரித இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தின் வளர்ச்சிகள்

M.R.T.S

1983-84 வருடங்களில் இந்திய இருப்புப் பாதை போக்குவரத்து அமைச்சகத்தின் மூலமாக சென்னைக் கடற்கரை முதல் திருமயிலை வரை முதலாம், திரளான துரித இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தின் முதல் நிலை 8.55 கி.மீட்டர் தூரத்திற்கு இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. ரூபாய் 53.46 கோடியில் உத்தேசிக்கப்பட்ட இந்த திட்டம் மத்திய திட்ட ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டு, இரயில்வே வாரியத்தால் ஒப்பளிக்கப்பட்டது. இத்திட்டமானது ரூ.260 கோடிகளில் முடிக்கப்பட்டு, 1997 அக்டோபர் மாதத்திலிருந்து செயல்பட்டு வருகின்றது.

தமிழக அரசு தமது பங்காக 19.68 ஹெக்டேர் அரசு நிலங்களையும் 0.54 ஹெக்டேர் தனியார் நிலங்களையும் இருப்புப் பாதை போக்குவரத்து துறைக்கு தானமாக வழங்கியது. இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பீடு ரூ.60.00 கோடிகளாகும். இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3500 குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க ரூபாய் 6.00 கோடிகள் தமிழக அரசால் செலவிடப்பட்டுள்ளது.

முதலாம் திரளான துரித இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தின் கட்டுமானச் செலவு, பயணப் பெட்டிகள், சய்கை முறை ஆகியவைகளின் உத்தேசிக்கப்பட்ட மொத்த செலவையும் இந்திய அரசே ஏற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் முதலாம் துரித இரயில் திட்டம் முடிக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முதலாம் திரளான துரித இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தில் தரைவழிப் பாதை 2.75 கி.மீ நீளமும் உயர்த்தப்பட்ட வழிப்பாதை 5.80 கி.மீட்டர் நீளமும் கொண்டுள்ளது. முதல் இருப்புப் பாதை போக்குவரத்து நிலையத்திலிருந்து கடைசி இரயில் நிலையம் வரை தடையின்றி, வண்டிகள் சென்று வர இருவழி இருப்புப்பாதைகள் உள்ளன. இந்த முறையில், நாளொன்றிற்கு கடற்கரை முதல் திருமயிலை வரையிலும், திருமயிலை முதல் கடற்கரை வரையிலும் மொத்தம் 6 லட்சம் பயணிகள் பயணிக்கலாம். தற்போழுது சுமார் 10 முதல் 12 ஆயிரம் பயணிகளே நாளென்றுக்கு பயணம் செல்கின்றனர்.

இரண்டாம் நிலை திரளான துரித இருப்புப் பாதை போக்குவரத்துத் திட்டம் (திருமயிலை முதல் வேளச்சேரி வரை)

1 நீளம் 11.165 கி. மீ.
  அ) உயர்த்தப்பட்ட பாதை 7.848 கி. மீ.
  ஆ) தரைவழிப் பாதை 3.317 கி. மீ.
2 அ) இருப்புப் பாதையின் அளவு (1676 மி.மீ.) அகல இருப்புப் பாதை
  ஆ) வழித்தடங்களின் எண்ணிக்கை 2
3 நிலையங்களின் எண்ணிக்கை 9
  அ) உயர்த்தப்பட்ட பாதையில் 7
  ஆ) தரைவழிப் பாதையில் 2
4 நிலையங்களின் விபரம் அ . மந்தைவெளி (உயர்த்தப்பட்டது)
ஆ. கிரீன்வேஸ் ரோடு
இ. கோட்டூர்புரம்
ஈ. கஸ்தூர்பாய் நகர்
உ. இந்திரா நகர்
ஊ. திருவான்மியூர்
எ. தரமணி (உயர்த்தப்பட்டது)
ஏ. பெருங்குடி (தரை வழி)
ஐ. வேளச்சேரி (தரை வழி)
5 நடை மேடையின் தூரம் 280 மீ
6 ஏற்றிச் செல்லும் பயணிகளின் அளவு நாளொன்றிற்கு 6 லட்சங்கள்
7 நிலம்
அ) அரசு நிலம்
ஆ) தனியார் நிலம்
68.43 ஹெக்டேர்
34.50 ஹெக்டேர்
33.93 ஹெக்டேர்
8 திட்ட மதிப்பீடு ரூ.733.39 கோடிகள்(33:67 என்ற விகிதத்தில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசும் பகிர்ந்து கொள்ளுதல்)
9 திட்டத்தின் துவக்கம் மார்ச் 1998
10 திட்டம் முடிவுறும் நாள் ஏப்ரல் 2007
11 அக்டோபர் 2006 வரை செலவு ரூ.665.53 கோடிகள்

நீட்டிக்கப்பட்ட இரண்டாம் நிலை திரளான துரித இருப்புப் பாதை போக்குவரத்துத் திட்டம் (வேளச்சேரி முதல் புனித தோமையார் மலை வரை)

1 பாதையின் நீளம்
உயர்த்தப்பட்ட பாதை
5 கி. மீ.
5 கி. மீ.
2 அ) இருப்புப் பாதையின் அளவு (1676 மி.மீ.)
ஆ) வழித்தடங்களின் எண்ணிக்கை
அகல இருப்பு பாதை
2
3 நிலையங்களின் எண்ணிக்கை
உயர்த்தப்பட்டது
3 3
4 நிலையங்களின் பெயர் அ. புழுதிவாக்கம்
ஆ. ஆதம்பாக்கம்
இ. புனித தோமையார் மலை
5 மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூ.417.00 கோடிகள்
6 திட்டத்தின் துவக்கம் அரசு ஆணைகள் எதிர்பார்க்கப்படுகிறது