மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து 02.08.2024 அன்று திரு.வி.க.நகர் மாநகராட்சி மண்டல அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது