செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர் ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகிய கிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை 19.07.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் செல்வி.அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்