27.01.2024 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய முதன்மை நிர்வாக அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ. பார்த்தீபன் அவர்களும், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.யுவராஜ் அவர்களும் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் திடீர் ஆய்வு மேற்க கொண்டனர். இந்த ஆய்வின்போது அனுமதியற்ற முறையில் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விற்பனை செய்த நபர்களிடமிருந்து டிக்கெட் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்களை விடுவித்தனர்.