15.03.2024 அன்று கோயம்பேடு, மலர் அங்காடியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி. பிரபாகர ராஜா அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றை (Fountain) திறந்து வைத்து, 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்