கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் புதிய பேருந்து முனையத்தில் 31.10.2023 அன்று மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் தலைமையில் பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலையம் அமைத்தல், பூங்கா அமைத்தல், மாநகர பேருந்து நிலையம் முகப்பு வளைவு அமைத்தல் தொடர்பாகவும், முனையத்திலிருந்து அரசு பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி இயக்குவது தொடர்பாகவும், முனையத்தையொட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை விரவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.