குடியிருப்புக் கட்டிடம் கட்டும் முன்னர் / மற்றும் மனைவாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய குறிப்புகள்
-
விற்பனையாளருக்கு சொத்தில் உரிமை உள்ளதா என்பதனை சோதித்துப்பாருங்கள்.
-
சம்பந்தபட்ட மனைக்கான மனை உட்பிரிவு வரைபடம் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அங்கீகாரம் பெறப்பட்டு உள்ளாட்சி மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்பதை சோதித்து அறியுங்கள்.
-
மனைப் பிரிவில் அமைந்துள்ள சாலைகள் மற்றும் பூங்காப் பகுதிகள் உள்ளாட்சி நிறுவனத்திற்கு தானப் பத்திரம் மூலம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளனவா என்பதை சோதித்து அறியுங்கள்.
-
மனையின் அணுகுபாதை உள்ளாட்சி மன்றத்தால் பராமரிக்கப்படுகின்றதா அல்லது அவை ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளனவா என்பதை சோதித்து அறியுங்கள்.
-
திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் வரைபடம் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்புடையதாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
-
திட்ட அனுமதி விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
-
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதியும் உள்ளாட்சி நிறுவனத்திடம் கட்டிட உரிமம் பெற்றுக் கொள்ளுங்கள்.
-
இல்லாவிடில் அங்கீகாரமற்ற, விதிமீறிய கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
-
எனவே அங்கீகாரமற்ற / விதிமீறல் கட்டுமானங்களை தவிர்க்கவும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் / உள்ளாட்சி நிறுவனங்களின் அமலாக்க நடவடிக்கையிலிருந்து விலகி நிம்மதியாக இருங்கள்.